நமது இயக்கத்தின் குரல்! நமது மேல்நிலைக்குரல்! வாசித்தீர்களா?..
Thursday, December 12, 2013
7 -அம்ச கோரிக்கை போராட்டத்தில் பங்கு பெற்ற கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலைஆசிரியர்க்ளை தலைமை ஆசிரியர் பாராட்டுதல்
(திண்டுக்கல் மாவட்டத்தில் பங்கு பெற்றவர்களில் இப்பள்ளியின் ஆசிரியர்கள் மட்டும் மொட்டை அடித்து கலந்து கொண்டார்கள்)
ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பேரணி
Sunday, December 8, 2013
7 கோரிக்கைகளை வலியுறுத்தி
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மொட்டையடித்து நூதன போராட்டம்
சென்னையில் நடந்தது
சென்னை, டிச.8-சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டம்தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளிக் கல்வித்துறையை கண்டித்தும் மற்றும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தனசிங் ஐசக் மோசஸ் வரவேற்புரையாற்றினார். பள்ளிக்கல்வித்துறைபின்னர் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் கோட்டையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். மெரினா டவர் அருகே சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு, மாநிலப்பொறுப்பாளர்கள் 6 பேர் மட்டும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியிடம் தங்கள் மனுவை கொடுத்துவிட்டு வந்தனர்.பின்னர் இதுகுறித்து மாநிலத்தலைவர் கே.மணிவாசகன் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த பேரணியின் முக்கிய நோக்கம், பள்ளிக்கல்வி துறையை 3½ ஆண்டுகாலமாக அணுகி எந்தவித செயல்பாடுகளும் இல்லாத நிலை இருக்கிறது. இதில் முதல்-அமைச்சர் தலையிட்டு இதை சரிசெய்ய வேண்டும். மேலும், 6-ம் வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியரை விட, 12-ம் வகுப்பு எடுக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஊதியம் குறைவாக வாங்குகிறார் எனவே அவர்களின் ஊதியத்தை சரிசெய்ய வேண்டும். மொட்டையடித்த ஆசிரியர்கள்அரசாணை 720-ல் திருத்தம் செய்ய வேண்டும். மேலும் தேர்வுப்பணிகளின் உழைப்பு ஊதியம் மற்றும் மதிப்பு ஊதியத்தையும் உயர்த்த வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணியை நடத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாநில பொதுச்செயலாளர் கை.இளங்கோவன், மாநிலச்செயலாளர் செ.வின்செண்ட், மாநிலப்பொருளாளர் சி.திருஞானகணேசன் உள்பட அனைத்து மாவட்டங்களில் இருந்து வந்த 1500-க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்த பேரணியில் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மொட்டையடித்து கலந்துகொண்டனர்.
Sunday, July 29, 2012
GENERAL BODY MEETING ON 28.07.2012 AT TRICHY
Thursday, July 5, 2012
90-92 REGULARISATION ORDER
9
Saturday, June 16, 2012
UPGRADED SCHOOL LIST
CLIK HERE TO SEE UPGRADE LIST
2012-2013 COUNCLING DATE
TO KNOW NEW COUNCLING DATE CLIK HERE
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
About Me
DINDIGUL TNHSPGTA
WORKING AS A P.G.TEACHER
View my complete profile