Thursday, August 25, 2011

எஸ்.எம்.எஸ்., வருகை பதிவிற்கு கடும் எதிர்ப்பு

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011,00:50 IST
கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை எஸ்.எம்.எஸ்., மூலம் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவை கைவிடக்கோரி கடலூரில் நேற்று ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி, தமிழக அளவில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் கடைசி (கடலூர் 29வது இடத்திலும், விழுப்புரம் 30வது இடத்திலும்) மாவட்டமாக இருந்தது.அதிகாரிகள் நடவடிக்கையால் கடைசி இடத்தில் இருந்த மாவட்டம் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 30ல் இருந்து24வது இடத்திற்கு முன்னேறி இருப்பது ஆறுதலான விஷயம். மேலும் இந்த மாவட்டத்தை முன்னுக்குக் கொண்டு வர அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். பொதுத்தேர்வை சந்திக்கும் உயர்நிலைக் கல்வி மாணவர்களை கசக்கிப் பிழிவதைவிட ஆரம்பக் கல்வியிலேயே சிறந்த கல்வி புகட்டி உன்னத நிலைக்கு கொண்டுவ ரவேண்டும் என அரசு கருதுகிறது. கிராமப்புற மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக நகர்ப்புறத்தை நோக்கி குடிபெயர்வதை தடுப்பதற்காக, கிராமப்புறப் பள்ளிகளில் சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என அரசு கருதுகிறது.
இதன் காரணமாக ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கும் தவறாமல் பள்ளிக்கு வருகை தரவேண்டும் என்ற நோக்கத்தோடு கலெக்டர் அமுதவல்லி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் வருகையை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே இந்தத் திட்டம் தர்மபுரி மாவட்டத்தில் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதால் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த எஸ்.எம்.எஸ்., கொடுக்கும் முறைக்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன் ஒரு கட்டமாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி பொதுச்செயலர் அப்துல் மஜித், சுப்ரமணியன், மணிவாசகம் பங்கேற்றனர். இப்போராட்டத்திற்கு ஒரு சில ஆசிரிய சங்கங்கள் ஆதரவு தெரிவித்தும், சில சங்கங்கள் கலெக்டரின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும் அறிக்கை விட்டுள்ளன. தப்பி பிழைத்து வந்த அரசு: ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய சுப்ரமணியம், கடந்த கால அ.தி.மு.க., ஆட்சியின் போது ஜாக்டோ, ஜியோ போராட்டத்தில் ஏராளமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் அதனை கண்டு நாம் பயப்படவில்லை. பல்வேறு போராட்டங்களை சந்தித்து தான் வந்துள்ளோம். ஏதோ 5 ஆண்டு காலம் காத்துக்கிடந்து தப்பி பிழைத்து வந்த அரசு இது. அதற்குள்ளாகவே இந்த அரசு வேலையை காண்பிக்கத் துவங்கி விட்டது. கலெக்டர் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை போன்ற துறைகளோடு ஒப்பிட்டுப்பாருங்கள். கொடுக்கின்ற சம்பளத்திற்கு 88 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி கொடுத்துள்ளோம். வேறு எந்த துறையிலாவது உண்டா? எனவே எஸ்.எம்.எஸ்., கொடுக்கும் உத்தரவை கைவிட வேண்டும் என பேசினார்.

No comments:

Post a Comment

About Me